கொருக்குப்பேட்டை, : கொருக்குப்பேட்டையில், கணவர் கண் முன்னே, மனைவியின் தாலி செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை கொருக்குப்பேட்டை, ஆரணி ரங்கன் தெருவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்.இவரது மனைவி யோகேஸ்வரி, 42. வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நேற்று நடந்த உறவினர் வீட்டு வரவேற்பு நிகழ்ச்சியில், தம்பதி பங்கேற்றனர். நிகழ்ச்சி முடிந்து கணவருடன், யோகேஸ்வரி மண்டபத்தை விட்டு வெளியே வந்தார். அப்போது, 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர், யோகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த ஐந்து சவரன் தாலி செயினை பறிக்க முயன்றனர்.அப்போது, செயினை இறுக்கிப் பிடித்ததால், கொள்ளையர்கள் கையில் நான்கு சவரன் சென்றது. ஒரு சவரன் நகை மட்டும், யோகேஸ்வரி கையில் மிஞ்சியது.இது குறித்து தண்டையார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.