ராமநாதபுரம் : மாவட்டத்தில் ஆசிரியர் கலந்தாய்வு முகாமில், நேற்று 17 மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தென்காசி, திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களுக்கு பணி மாறுதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுநோய் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி ராமநாதபுரத்தில் ஆசிரியர்கள் பொதுஇடமாறுதல் கலந்தாய்வு ஆன் லைன் மூலம் நடத்தப்படுகிறது.நேற்றுமுன்தினம் ஜன., 24ல் அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் வருவாய் மாவட்டத்திற்குள் இடமாறுதல் நடந்தது. நேற்று (ஜன., 25ல்) அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் வெளிமாவட்ட மாறுதல் கலந்தாய்வுநடந்தது.
இதில் 17 தலைமையாசிரியர்கள் தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், துாத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இடமாறுதல் ஆணை பெற்றுள்ளனர்.நாளை (ஜன., 27) நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கும், ஜன., 28 ல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, ஜன., 29 ல் பட்டதாரி ஆசிரியர் பணிநிரவல் ஒன்றியத்திற்குள், மதியம் கல்வி மாவட்டத்திற்குள் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.