பரமக்குடி : பரமக்குடியில் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் மணிகண்டன், எம்.ஜி.ஆர்., மன்ற மாநில துணைச் செயலாளர் சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ., சதன் பிரபாகர், முன்னாள் மாவட்ட செயலாளர் தர்மர், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் உதுமான் அலி முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் ஜமால் வரவேற்றார். அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெற ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும், என பேசினர்.