கொடுங்கையூ :திருவொற்றியூரில் ஏலச்சீட்டு நடத்தி, 7 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பெண்கள் உட்பட 4 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.திருவொற்றியூர், சாத்துமா நகர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர், ஸ்டெல்லா, 37. இவர், மண்ணடி, தம்பு செட்டி தெருவில் உள்ள பிரவுசிங் மையத்தில், டைபிஸ்ட்டாக வேலை பார்க்கிறார்.கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், சிவசங்கர், கவிதா, கலா ஆகியோருடன் இணைந்து மாத ஏலச்சீட்டு நடத்தியள்ளார். கலைச் செல்வி ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால், இவர்களிடம், கடந்த 2019 நவம்பரில், 7 லட்சம் ரூபாய் வரை ஸ்டெல்லா கட்டிஉள்ளார்.ஆனால்,ஏலச்சீட்டும் முடிந்தும் அவர்கள் பணத்தை திருப்பி தரவில்லை. இது தொடர்பாக, சென்னை பெருநகர 10வது குற்றவியல் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நீதிமன்றம் உத்தரவின்படி கொடுங்கையூர் போலீசார் நேற்று கலைச்செல்வி, சிவசங்கர், கவிதா, கலா உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.