ஆதம்பாக்கம் ரயில்வே சுரங்கப்பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் உயிர் பலி அபாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜன
2022
22:38



ஆலந்துார் - ஆதம்பாக்கத்தை இணைக்கும் ரயில்வே கேட் பகுதியில், துவங்கப்பட்ட சுரங்கப்பாதை திட்ட பணிகள் மூன்று ஆண்டுகளுக்கு மேல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆபத்தான வகையில் தண்டவாளத்தை கடப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.இதனால், விபத்துகள் ஏற்பட்டு, உயிர் பலி நிகழும் அபாயம் நிலவுகிறது. சென்னை, மவுன்ட் - கிண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதி, வேளச்சேரி சாலையில், எல்.சி.,14 எனும் ரயில்வே கேட் ஒன்று இருந்தது.தவிப்புஆலந்துாரையும், ஆதம்பாக்கத்தையும் இணைக்கும் பிரதான வழித்தடமான அப்பகுதியை, நுாற்றுக்கணக்கான இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், ஏராளமான பாதசாரிகள் பயன்படுத்தி வந்தனர்.இந்த வழித்தடத்தில், அதிகாலை முதல் நள்ளிரவு வரை மின்சார ரயில், வெளி மாவட்டங்கள் செல்லும் ரயில் தொடர்ந்து செல்வதால், ஆலந்துார், ஆதம்பாக்கம் பகுதி மக்கள், உரிய நேரத்தில் ரயில்வே கேட்டை கடக்க முடியாமல் தவித்து வந்தனர்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட ரயில்வே கேட் உள்ள இடத்தில், இலகுரக வாகனங்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், சென்னை மாநகராட்சியும், ரயில்வே அதிகாரிகளும் பேச்சு நடத்தி, சுரங்காப்பாதைக்கான திட்டம் வகுக்கப்பட்டது.பின், ஒப்பந்தம் விடப்பட்டு, பூமி பூஜையுடன் பணிகளும் துவங்கின. ஆனால், சில நாட்களிலேயே இப்பணிகள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கிடப்பில் போடப்பட்டது. இத்திட்டத்திற்காக, ரயில்வே கேட் அகற்றப்பட்டதால், மக்கள் ஆபத்தான முறையில் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்வதை வாடிக்கையாக்கினர். இதனால், விபத்துக்களும், உயிர் இழப்பும் ஏற்பட்டது. கோரிக்கைஇது குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது. அதன் பலனாக, சம்பந்தப்பட்ட பகுதி, மதில் சுவர் எழுப்பி மூடப்பட்டது.போக்குவரத்து முற்றிலும் தடை பட்டதால், சுவரின் சிறு பகுதியை உடைத்து தற்போது ஆபத்தான முறையில் பொதுமக்கள், தண்டவாளத்தை கடந்து வருகின்றனர்.எனவே, சென்னை மாநகராட்சியும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, சுரங்கப்பாதை பணிகளை விரைந்து துவக்க வேண்டும் அல்லது பொதுமக்கள் கடந்து செல்லும் வகையில் நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. - -நமது நிருபர்- -

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X