சோழிங்கநல்லுார் மண்டலம், 200வது வார்டு, செம்மஞ்சேரி, ஜெவகர் நகர், எழில்முக நகர், சுனாமி நகர் பகுதியில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.சென்னையின் பல்வேறு பகுதியில், கருத்தடை செய்யும் நாய்களை இங்கு கொண்டு விட்டு செல்கின்றனர். இதனால், தெருக்களில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உணவு கிடைக்காமல் பசியுடன் சுற்றும் நாய்கள், வீட்டுக்குள் புகுந்து கிடைந்த உணவு பொருட்களை கடித்து, குதறி செல்கின்றன. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள், முதியவர்களிடம் உணவை பறித்து செல்கின்றன. ஏற்கனவே, இப்பகுதியில் உள்ள முதியவர்கள் சிலரை நாய்கள் கடித்துள்ளன. தெரு நாய் தொல்லையால், மிகவும் அச்சத்தில் உள்ளோம். மாநகராட்சியின் சுகாதாரத்துறை, நாய்களை பிடித்து செல்ல தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.