பிராட்வே, -பிராட்வே பேருந்து நிலையத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் குறித்து, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:பிராட்வே பேருந்து நிலையத்தை முழுமையாக ஆய்வு செய்ய வந்தோம். பேருந்து நிலையத்திற்கு ஒரு நாளில் எத்தனை பேருந்துகள் வருகின்றன; எத்தனை பயணியர் வந்து செல்கின்றனர் என கணக்கிட்டு, தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்போம்.சென்னையில், பொது கழிப்பிடங்களை மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.'ஸ்வச் பாரத்' திட்டத்தின் வாயிலாக, சென்னையில் புதிதாக 252 இடங்களில் பொது கழிப்பிடங்களை அமைத்து, தனியார் பங்களிப்புடன் அவற்றை பராமரிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, முதல்வர் ஸ்டாலினிடம் அனுமதி பெற்று பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது, அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை தி.மு.க., - எம்.பி., தயாநிதிமாறன், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் உடன் இருந்தனர்.