சென்னை, :குடியரசு தின விழாவை ஒட்டி, சென்னையில் பல்வேறு இடங்களில், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நாடு முழுதும், குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னையில் 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாதுகாப்பு பிரிவு, மோப்ப நாய், வெடிகுண்டு செயலிழப்பு மற்றும் கடலோர காவல் படை போலீசார் உள்ளனர்.இவர்கள் நேற்று, மெரினா கடற்கரை, கோட்டூர்புரம் பாலம், சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கம் என, பல்வேறு இடங்களில், மோப்ப நாய் மற்றும் 'மெட்டல் டிடெக்டர்' உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனர்.