பெரும்பாக்கம்,: பெரும்பாக்கம், சர்ச் அருகில் நின்ற நான்கு பேரிடம் ரோந்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்ணுக்கு பின் முரணாக பதில் கூறியதால், பெரும்பாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில், கண்ணகி நகரைச் சேர்ந்த துரைராஜ், 25, தனுஷ், 19, வீரமுத்து, 19, நாகராஜ், 24, எனவும், வீடுகளின் பூட்டை உடைத்து திருடும் கும்பல் என தெரிந்தது.பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் திருடி உள்ளனர். நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 7 சவரன் நகை, ஒரு கேமரா பறிமுதல் செய்தனர்.