திருப்பூர்:சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபட்டுவந்த சாய ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.திருப்பூரை சேர்ந்த, 15 வயது சிறுமி ஒருவர், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்தார். சிறுமி வீட்டின் அருகே வசித்து வரும், இரண்டு பேர் சிறுமியிடம் கடந்த சில மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தனர். இது சிறுமியின் தாய்க்கு தெரிய வந்தது. இதனால், சிறுமியின் தாய் திருப்பூர் தெற்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். சிறுமியை கட்டாயப்படுத்தி, அவ்வப்போது பாலியல் அத்துமீறலில், இருவர் ஈடுபட்டு வந்தது உறுதியானது.இதுதொடர்பாக, பனியன் தொழிலாளி பாபு, 47, சாய ஆலை உரிமையாளர் இளையராஜா, 38 ஆகியோர் மீது 'போக்சோ' வழக்குப்பதிவு செய்து, இளையராஜாவை கைது செய்தனர். தலைமறைவான பாபுவை போலீசார் தேடி வருகின்றனர்.