உளுந்துார்பேட்டை:நாகை மாவட்டம், இடையத்தான்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துகுமார், 46. இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அருகே கிடை கட்டுவதற்காக 150 ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை 5:30 மணியளவில் மேய்ச்சலுக்காக ஆடுகளை, தேசிய நெடுஞ்சாலையைக் கடந்து செம்பியன்மாதேவி பகுதிக்கு ஓட்டிச் சென்றார். அப்போது, ஒரு கன்டெய்னர் லாரி மோதியதில் 15 ஆடுகள் இறந்தன. லாரி டிரைவர் மஸ்தான், 43; என்பவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.