பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்கப்படும் பகுதியை, பலர் குப்பைக்கிடங்காக மாற்றியுள்ளது காண்போரை முகம் சுளிக்க செய்வதாக உள்ளது.கோவை ரோட்டில், இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் அமைக்கப்படுகிறது. கட்டுமான பணிகள் நடக்கும், ரோடு அருகே பலரும் குப்பைக்கிடங்காக பயன்படுத்தி, பல்வேறு கழிவுகளை கொண்டு வந்து குவித்துச்செல்கின்றனர்.கழிவுகளில் தீ வைப்பதால், புகை மூட்டம் காற்றில் சுற்றுப்பகுதி பரவி, குடியிருப்புவாசிகளை பாதிக்கச்செய்கிறது.இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.