உடுமலை:உடுமலையில், பொதுமக்கள் கூடும் இடங்களில், கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.உடுமலை பகுதிகளில், கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில், நகராட்சி சார்பில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.நகராட்சி சுகாதாரத்துறை சார்பில், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சந்தை, உழவர் சந்தை மற்றும் பிரதான ரோடுகள், வணிக நிறுவனங்கள் என பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில், வாகனங்கள் வாயிலாக, கிருமி நாசினி தெளிக்கும் பணியும் நடந்து வருகிறது.மேலும், பஸ் ஸ்டாண்டிற்கு வந்து செல்லும் பஸ்களில், பயணிகள் இறங்கியதும், முழுவதும் கிருமி நாசனி தெளிக்கப்பட்டு, அதற்கு பிறகே பயணிகள் ஏறவும் அனுமதிக்கப்படுகிறது.விழிப்புடன் இருக்க...கிருமி நாசினி தெளிக்கும் பணி மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிக்கும் போது, தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். எனவே, பொதுமக்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள் இப்பணிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.மேலும், முகக்கவசம் அணிதல், அவசியம் இல்லாமல் வெளியில் வருவதை தவிர்த்தல், கூட்டம் சேராமல், தனி மனித இடைவெளி பராமரித்தல் உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றினால், மட்டுமே தொற்று பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும்.பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கும், கடைகள், வணிக நிறுவனங்களில், சானிடைசர், கை கழுவும் வசதி, தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத நிறுவனங்களுக்கு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.