திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் பேரூராட்சி, பொது பிரிவிற்கு ஒதுக்கப்பட்டதால், அரசியல் பிரமுகர்கள் மகிழ்ச்சியுடன் போட்டிக்கு தயாராகின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேரூராட்சியில், 18 வார்டுகள் உள்ளன.
வாக்காளர்கள் 25 ஆயிரம் பேர் உள்ளனர். இதன் தலைவர் பதவி 1996, 2001 ஆண்டுகளில் பொது பிரிவு, 2006-- 2011 ஆண்டுகளில், பொது பெண் பிரிவு என, தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த, தேர்தல் ஆணையம் தயாராகும் நிலையில், இந்த பேரூராட்சி, எஸ்.சி., பொது பிரிவு அல்லது எஸ்.சி., பெண் பிரிவு என, இன சுழற்சி முறைக்காக மாற்றப்படலாம் என, இப்பகுதி அரசியல் பிரமுகர்கள் கருதினர்.அவ்வாறு ஒதுக்கப்பட்டால், தி.மு.க., - அ.தி.மு.க., பிரமுகர்கள், ஆதிதிராவிடர் ஒருவரை பெயரளவில் களமிறக்கி, நிர்வாக பின்னணியில் செயல்படுவர்.
இதற்கு மாறாக, தற்போதும் பொது பிரிவாக நீடித்து, தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகளின் பிரமுகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். தலைவர் பதவிக்காக, கட்சித் தலைமையிடம், நெருக்கமானவர் மூலம் முயன்று வருகின்றனர்.