புதுச்சேரி : கழிவறையில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.லாஸ்பேட்டை ,சாந்தி நகர், கட்டபொம்மன் வீதியைச் சேர்ந்தவர் சம்பத், 71; குஜராத்தில் உள்ள ஜவுளி ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் கழிவறையில் தவறி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சம்பத் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.