பரங்கிப்பேட்டை, : பரங்கிப்பேட்டை ரெங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் உள்ள தியாகி ராஜேந்திரன் சமாதிக்கு, தி.மு.க., ஒன்றிய செயலர் முத்துப்பெருமாள் தலைமையில், கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில், ஒன்றிய அவைத் தலைவர் ராஜாராமன், நகர செயலர் முனவர் உசேன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முகமது யூனுஸ், ஒன்றிய வர்த்தக அணி செயலர் சங்கர், முன்னாள் துணை தலைவர் செழியன், முன்னாள் நகர செயலர் பாண்டியன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், செல்வகுமார், ராமலிங்கம், ஜாபர் அலி, லலிதா, கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.