மறைமலை நகர் : செங்கல்பட்டு மாவட்டத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் போன்றவற்றின் ஆணையர், தலைவர்கள், அந்தந்த பகுதியில் மாடுகளின் உரிமையாளர்களுக்காக, அறிவிப்பு பலகை வைத்துள்ளனர்.அதில் கூறியிருப்பதாவது:போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் மாடுகள் பிடிக்கப்பட்டு, முதல் நாள், அந்தந்த ஊரிலேயே தற்காலிக பட்டியில் அடைக்கப்படும்.