விருத்தாசலம் ; விருத்தாசலத்தில் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் நிகழ்ச்சி நடந்தது.மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி தலைமை தலைமை தாங்கினார்.
அனைத்துலக எம்.ஜி.ஆர்., துணை செயலாளர் முருகுமணி, முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், உமாமகேஸ்வரன், பாசறை மாவட்ட செயலாளர் ரமேஷ், முன்னாள் சேர்மன் அருளழகன் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சந்திரகுமார் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தியாகிகள் படங்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தினார். ஐ.டி., அணி மண்டல துணை செயலாளர் அருண், அரசு வழக்கறிஞர் விஜயகுமார், நகர தலைவர் தங்கராசு, ஒன்றிய சேர்மன் மேனகா விஜயகுமார், எம்.ஜி.ஆர்., இளைஞரணி அரங்கமணிவண்ணன், ஒன்றிய செயலாளர்கள் முனுசாமி, பச்சமுத்து, தம்பிதுரை, ராஜேந்திரன், முத்து, ரகுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.