செம்மண் ஏற்றி சென்ற 3 டிராக்டர்கள் பறிமுதல் | கடலூர் செய்திகள் | Dinamalar
செம்மண் ஏற்றி சென்ற 3 டிராக்டர்கள் பறிமுதல்
Added : ஜன 26, 2022 | |
Advertisement
 

மந்தாரக்குப்பம் : ஊமங்கலம் அடுத்த மேற்கிருப்பு ஏரி பகுதியில் தாசில்தார் தனபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜேந்திரன், ராஜராஜன், சார்ல்ஸ் உள்ளிட்ட போலீசார் ரோந்து சென்றனர்.

அவ்வழியாக வாகனத்தில் செம்மண் ஏற்றி சென்றவர்கள் தாசில்தார் மற்றும் போலீசார் வருவதை கண்டதும் டிராக்டர்களை நிறுத்தி தப்பிச் சென்றனர். வடக்கிருப்பு பகுதியை சேர்ந்த சக்திவேல், மேற்கிருப்பு பகுதியை சேர்ந்த இளங்கோவன், சிவக்குமார் மீது வழக்கு பதிந்து தேடி வருகின்றனர். செம்மண் ஏற்றி சென்ற 3 டிராக்டர்கள், ஜே.சி.பி.,யை பறிமுதல் செய்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X