கடலுார் : கடலுாரில் பல்வேறு கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.தி.மு.க.,அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, மாவட்ட அவைத் தலைவர் தங்கராசு, மாவட்ட பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். அய்யப்பன் எம்.எல்.ஏ., தியாகிகள் படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, பொருளாளர் சலீம், மாணவரணி நடராஜன், வி.ஆர்., டிரஸ்ட் விஜயசுந்தரம், லட்சுமி செக்யூரிட்டி சர்வீஸ் நிர்வாகி தினகரன், சரத் தினகரன், முன்னாள் கவுன்சிலர் தமிழரசன், இளங்குமார் பங்கேற்றனர்.அ.தி.மு.க.,: அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலாளர் தட்சணா, ஒன்றிய செயலாளர் காசிநாதன், நகர துணை செயலாளர் கந்தன், இலக்கிய அணி ஏழுமலை, முன்னாள் கவுன்சிலர் தமிழ்ச்செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.