விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாணவரணி செயலாளர் வண்டிமேடு சக்திவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் சண்முகம் மொழிப்போர் தியாகிகளின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.முன்னாள் எம்.எல்.ஏ., முத்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்பாபு, ராமதாஸ், முருகன், இளைஞரணி இணைச் செயலாளர் ராஜ்குமார், மாணவரணி துணைத் தலைவர் மனோகர், ஜெ., பேரவை துணைச் செயலாளர் திருப்பதி பாலாஜி, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஸ்ரீதர், ஐ.டி., பிரிவு வேலுார் மண்டல பொருளாளர் ஜெகதீஸ்வரி சத்தியராஜ், மாவட்ட செயலாளர் ராம்குமார், ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தாமரைக் கண்ணன், நகர மாணவரணி செயலாளர் அன்பு, துணைச் செயலாளர்கள் தீனா, பிரபு, ஒன்றிய கவுன்சிலர் செண்பகசெல்வி குமரன், நகர எம்.ஜி.ஆர்., பேரவை செயலாளர் குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.