விக்கிரவாண்டி : விக்கிரவாண்டியில் பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு, புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி ஒன்றியத்தைச் சேர்ந்த 131 பயனாளிகளுக்கு 93 லட்சத்து 91 ஆயிரம் ரூபாய் மதிப்பில் தாலிக்குத் தங்கம் வழங்கிப் பேசினார்.
மாவட்ட சமூக நல திட்ட அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார். மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், பி.டி.ஓ., நாராயணன், செயல் அலுவலர் அண்ணாதுரை, கண்காணிப்பாளர் சீத்தா, விரிவாக்க அலுவலர் பூங்கோதை, முன்னாள் சேர்மன் அப்துல் சலாம், முன்னாள் துணை சேர்மன் சர்க்கார் பாபு, நகர செயலாளர் நைனா முகமது, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.