முதியவர் இறந்ததாக பதிவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
06:52

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே முதியவர் இறந்ததாக பதிந்து, உதவித் தொகையை சமூக நலத்துறை அதிகாரிகள் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடலுார் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த வேட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வசிகாமணி, 62; திருமணமாகாதவர்.

இவர் 2010ம் ஆண்டில் இருந்து முதியோர் உதவித் தொகை பெற்று வருகிறார். அவருக்கு 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. அவர் விருத்தாசலம் சமூக நலத் துறை அலுவலகத்தில் கேட்ட போது, நீங்கள் இறந்து விட்டதாக பதிவாகி உள்ளது. இனி உங்களுக்கு முதியோர் உதவித் தொகை கிடைக்காது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.உயிரோடு இருக்கும் தான் இறந்ததாக எப்படி பதிவானது என விசாரித்தார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவரது அண்ணன் பரமசிவம் இறந்துள்ளார். அவரது ஆதார் எண்ணை தெய்வசிகாமணியின் பெயரில் அதிகாரிகள் பதிந்தது தெரிந்தது. அதிகாரிகளின் கவனக் குறைவால் முதியவருக்கு மூன்று மாதங்களாக உதவித் தொகை தடைபட்டுள்ளது.கம்யூ., மறியல்இது குறித்து தகவலறிந்த இந்திய கம்யூ., நகர செயலாளர் விஜயபாண்டியன் தலைமையிலான நிர்வாகிகள் முதியவருக்கு ஆதரவாக சமூக நலத்துறை அதிகாரிகளிடம் கேட்டனர். முறையான பதில் இல்லாததால் ஆத்திரமடைந்த இந்திய கம்யூ., நிர்வாகிகள் நேற்று பகல் 12:00 மணியளவில் விருத்தாசலம் - கடலுார் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.போலீசார் தாசில்தாரிடம் பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்றனர். தாசில்தார் தனபதி விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதையேற்று அவர்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X