செஞ்சி, : செஞ்சி டி.எஸ்.பி.,க்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், செஞ்சி டி.எஸ்.பி., பிரியதர்ஷினி. இவருக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்தது. நேற்று முன்தினம் செஞ்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். நேற்று மாலை வந்த முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு, டாக்டர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறார்.