கூடலுார்:கக்கனல்லா சோதனை சாவடியில், அரசு பஸ்சில், 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, இருவர் கைது செய்யப்பட்டனர்.தமிழக-கர்நாடக எல்லையான, கக்கனல்லா சோதனை சாவடியில், எஸ்.எஸ்.ஐ., பூராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, மைசூருவிலிருந்து, ஊட்டிக்கு வந்த கர்நாடக அரசு பஸ்களில் சோதனை நடத்தப்பட்டது. ஒரு அரசு பஸ்சில், 9,300 ரூபாய் மதிப்பிலான, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஊட்டியை சேர்ந்த சுரேஷ்குமார், 47, என்பவர் கைது செய்யப்பட்டார்.மற்றொரு அரசு பஸ்சில், 11 ஆயிரத்து 640 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சோலுாரை சேர்ந்த கோபால்,50, என்பவரை கைது செய்தனர். மசினகுடி இன்ஸ்பெக்டர் திருமலைராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.