குன்னுார்:குன்னுார் கேத்தி சாந்துார் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.குன்னுாரின் பல பகுதிகளில் தற்போது சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்கு சிறுத்தைகள் வந்துசெல்கின்றன. நேற்று முன்தினம் இரவு, 10:20 மணியளவில், கேத்தி அருகே சாந்துார் பகுதியில் காய்கறி தோட்டத்திற்குள் புகுந்து சென்றது, அங்கு உள்ள 'சிசிடிவி' கேமராவில் பதிவாகியுள்ளது. மக்கள் கூறுகையில்,'இப்பகுதியில் இரவில் சிறுத்தைகள் நடமாடுவதால், இரவில் வெளியே வர முடிவதில்லை. வனத்துறையினர் கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.