கோவை:'மதமாற்ற முயற்சி உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் காரணமாக, அரியலுார் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தை சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும்' என்று வலியுறுத்தி, ஹிந்து அன்னையர் முன்னணியினர், கோவையில் தீபம் ஏந்தியும் கருப்பு துணியை கண்களில் கட்டியும் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.அரியலுார் மாவட்டம் வடுகர்பாளையம் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.,விசாரிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி, பா.ஜ., ஹிந்து முன்னணி போராட்டம் நடத்தி வருகின்றன. நேற்று மாலை, கோவை காந்திபுரம் சித்தி விநாயகர் கோவில் முன், தீபம் ஏந்தியும் கண்களில் கருப்புத்துணி கட்டியும் ஹிந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோஷமிட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் தசரதன் தலைமை வகித்தார். ஹிந்து அன்னையர் முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் அம்பிகா முன்னிலை வகித்தார்.