சின்னசேலம் : சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில் கலெக்டர் மரக்கன்று நட்டார்.இந்திய தேர்தல் கமிஷன், ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 25ம் தேதி, தேசிய வாக்காளர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்த விழாவிற்கு, தாசில்தார் அனந்தசயனன் தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, வாக்காளர் அடையாள அட்டை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின், அங்குள்ள வளாகத்தில் மரக்கன்று நட்டார்.தொடர்ந்து, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 34 பேருக்கு, தாசில்தார் சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில், தனி தாசில்தார்கள் ராஜலட்சுமி, பாலகுரு, மணி, தலைமையிடத்து துணை தாசில்தார் ராஜா, வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் பங்கேற்றனர்.