தேசிய வாக்காளர் தின உறுதிமொழியேற்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
08:41

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் உறுதிமொழியேற்றனர்.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில், இந்திய குடிமக்களாகிய நாங்கள் ஜனநாயகத்தின் மீது உறுதியான நம்பிக்கை கொண்டு நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் கண்ணியத்தையும் நிலை நிறுத்துவோம்.ஒவ்வொரு தேர்தலிலும் எவ்வித அச்சமின்றியும் மதம், இனம், ஜாதி, சமூக தாக்கமின்றியும் அல்லது வேறு ஏதேனும் துாண்டுதல்களின்றியும் ஓட்டளிப்போம் என உறுதியளிக்கிறோம் என உறுதிமொழியேற்றனர்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் சுரேஷ் ராஜவேல், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ராஜாமணி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அப்துல் பாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்கொழுந்து, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, தேர்தல் தாசில்தார் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.திருக்கோவிலுார்தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் குமரன் தலைமையில், மண்டல துணை தாசில்தார்கள் மற்றும் ஊழியர்கள் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்தும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது பற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் அலுவலக ஊழியர்கள் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X