108 ஆம்புலன்ஸ் சேவையில் சுகாதார தனி நபர் வேலை வாய்ப்பு முகாம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
08:43

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான 'சாத்தி' எனும் பயிற்சி பெற்ற சுகாதார தனி நபருக்கான வேலை வாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி நடக்கிறது.108 ஆம்புலன்ஸ் மாவட்ட மேலாளர் அறிவுக்கரசு செய்திக்குறிப்பு:கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனை வளாகத்தில் 29ம் தேதி காலை 9:00 மணி முதல் பகல் 1:00 மணி வரை நடக்கிறது. தேர்வு செய்யப்படுபவர்கள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 12 மணி நேரம், பகல், இரவு என இரு ஷிப்ட்டுகளில் நியமிக்கப்படுவர்.இப்பணிக்கு 25 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். உயரம் 162.5 செ.மீ., இருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பேட்ஜ் வாகன உரிமம் இருத்தல் வேண்டும்.இலகுரக ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பி.எஸ்சி., டி.ஜி.என்.எம்., மற்றும் பி.எஸ்சி., உயிரியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோ பயாலஜி, பயோ டெக்னாலஜி, வேதியியல் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.பிளஸ் 2 தேர்ச்சிக்குப்பிறகு 2 ஆண்டுகள் கொண்ட ஏ.என்.எம்., - டி.எப்.பி.என்., - டி.என்.ஏ., - டி.எம்.எல்.டி., - டி.பார்ம்., படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். அறிவியல் பட்டத்துடன் பேட்ஜ் வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 14 ஆயிரத்து 966 ரூபாய் மாத ஊதியம் வழங்கப்படும்.தகுதியுடையவர்கள் கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்புக்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X