கோவை:தேவாயலத்தில் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக இருவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை ராமநாதபுரம் சிக்னல் அருகே ஹோலி டிரினிட்டி சர்ச் உள்ளது. இதன் நுழைவுவாயில் அருகே கண்ணாடி கூண்டில் செபஸ்தியார் சிலை வைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன், இரவு கண்ணாடி கூண்டு உடைக்கப்பட்டு, சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. கண்காணிப்பு கேமரா பதிவு அடிப்படையில் இருவரை தனிப்படை போலீசார் நேற்று பிடித்து விசாரித்து வருகின்றனர்.