'குடிசை இல்லா தமிழகம்' திட்டத்திற்கு புத்துயிர்: பசுமை வீடு கட்டியோர் நிலை கேள்விக்குறி!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜன
2022
11:18
பதிவு செய்த நாள்
ஜன 26,2022 11:13

வாலாஜாபாத்: ஏழை, எளிய மக்கள் பயனடைய 10 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, அரசு தற்போது புத்துயிர் அளித்துள்ளது. ஏற்கனவே எடுத்த குடிசைகள் கணக்கெடுப்பை வைத்து நேரில் ஆய்வு செய்யும் பணியை, ஊரக வளர்ச்சி துறையினர் துவக்கி உள்ளனர். அதேசமயம் பசுமை வீடு முடக்கப்பட்டதா, அத்திட்டத்தில் வீடு கட்டியோருக்கு, 'பில்' தொகை வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், தி.மு.க., அரசு ஆட்சி காலத்தில், 2010ல் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, குடிசை வீடுகளை ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுத்தனர்.கடந்த 2011ல் அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை, அரசு முடக்கியது.
அதற்கு பதிலாக, பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, அ.தி.மு.க., அரசு அறிவித்து, பசுமை வீடுகள் கட்டுவதற்கு, பணி ஆணை வழங்கியது.10 ஆண்டுகள் அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் முடங்கி இருந்தது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின், முதல்வராக பதவி ஏற்றதும், தி.மு.க., ஆட்சி காலத்தில் முடக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுக்கு புத்துயிர் அளித்து வருகிறார்.
அந்த வரிசையில், 'குடிசை இல்லாத தமிழகமாக உருவாக்குவோம்' என, மறைந்த முதல்வர் கருணாநிதி அறிவித்த கலைஞர் வீடு வழங்கும் திட்டத்திற்கு, புத்துயிர் அளித்துள்ளார்.கடந்த 2010ல் கணக்கெடுக்கப்பட்ட குடிசை வீடுகளை வைத்து, நடப்பாண்டு மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிட்டு உள்ளார்.

மகளிர் குழுவினர், ஊராட்சி செயலர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கணக்கெடுத்து வருகின்றனர்.இந்த கணக்கெடுப்பில் குடும்ப தலைவர், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, இனம், வீட்டின் வகைப்பாடு, நிலம் வகைப்பாடு மற்றும் ஆடு, மாடுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட 63 விதமான கேள்விகளுக்கு பதில் பெற்று வருகின்றனர்.
இத்தகவலை, மொபைல் செயலி மூலமாக கணக்கெடுப்பு குழுவினர் பதிவேற்றம் செய்ய வேண்டும். குறிப்பாக, அட்சரேகை மற்றும் தீர்க்க ரேகை பதிவு எண்ணுடன், செயலியில் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் 274 ஊராட்சிகளில், 1,354 குக்கிராமங்களில் 28 ஆயிரத்து 282 குடும்பம், குடிசைகளில் வசித்ததாக கணக்கெடுப்பு விபரம் உள்ளது.
அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகளில், 2,158 குக்கிராமங்களில், 56 ஆயிரத்து 856 குடிசைகள் இருப்பதாக விபரம் உள்ளது. இந்த குடிசைகளுக்கு ஊரக வளர்ச்சி துறையினர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். குடிசை வீடு மாறியிருக்கிறதா, புதிதாக ஏதேனும் குடிசை வீடுகள் வந்துள்ளனவா என, கணக்கெடுத்து வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில், தேர்வான பயனாளிகளின் பெயர் மற்றும் பிற விபரங்கள் ஊரக வளர்ச்சி இணைய தளத்தில், விபரம் சேகரிக்கப்பட்டு உள்ளது. அந்த பயனாளிகள், அரசு வீடு கட்டும் திட்டத்தில் ஏதேனும் பயன்பெற்றனரா என, முறையாக கணக்கெடுத்து வருகிறோம்.
பதினொரு நாள் கணக்கெடுப்புக்கு பின், அறிக்கையை, ஒரு மொபைல் செயலியில் அரசுக்கு சமர்ப்பித்த பின், தகுதி வாய்ந்த வீடு கட்டும் பயனாளிகளின் பெயர், பட்டியலில் வெளிவரும்.எந்த திட்டத்திலும் பயன்பெறாத நபர்களுக்கு, கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உண்மையான குடிசை பயனாளிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


பசுமை வீடு திட்டம் முடக்கம்?


அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், பசுமை வீடு வழங்கும் திட்டத்தை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா துவக்கினார்.இந்த திட்டத்தின் வாயிலாக, பல லட்சம் குடும்பத்தினர் வீடு கட்டி பயன் அடைந்துள்ளனர். 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு மாவட்டத்தில் 8,520; காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,841 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.
இத்திட்டம், தி.மு.க., அரசு பொறுப்பு ஏற்ற பின் முடக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தில் வீடு கட்டி வரும் பயனாளிகளுக்கு, வீடு கட்டியதற்கான 'பில்' கிடைக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது. இதை எந்த அதிகாரிகளும் தெளிவுபடுத்தவும் இல்லை.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pandit - Madurai,இந்தியா
26-ஜன-202212:34:30 IST Report Abuse
pandit கொள்ளையடிக்க கருணாநிதி கண்டுபிடித்த வழி. அதற்கு இரண்டு பெயர்கள் குடிசையில்லா தமிழகம், பசுமை வீடு. இரண்டும் குடிசையில் வாழும் மக்களை நடுத்தெருவிற்கு கொண்டுவந்து அவர்கள் இருந்த இடத்தையும் பட்டா போட்டு விற்பது.
Rate this:
Cancel
Shekar - Mumbai,இந்தியா
26-ஜன-202212:23:01 IST Report Abuse
Shekar அது என்ன பசுமை வீடுகள்? பச்சை பெயிண்ட் அடித்ததா? யாராவது என் அறியாமை இருளை நீக்குங்கள்.
Rate this:
raja - Cotonou,பெனின்
26-ஜன-202214:31:07 IST Report Abuse
rajaஇதுக்குத்தான் கட்டுமர சமசீருல படிக்க கூடாதுங்கிறது... இப்படி அறியாமை இருள் சூழ்ந்து இருக்கீங்களே.......
Rate this:
Cancel
Ramesh Sargam - Currently in Cupertino, California.,இந்தியா
26-ஜன-202211:35:54 IST Report Abuse
Ramesh Sargam இப்படி ஒரு கட்சி தங்கள் ஆட்சியில் கொண்டுவந்த மக்கள் நல திட்டங்களை, வேறு ஒரு கட்சி ஆட்சியை பிடித்தவுடன் மாற்றுவது சரியல்ல. இதனால் மக்களுக்கு பெரும் பிரச்சினை. அரசுக்கு பெரும் நஷ்டம். காழ்ப்பு அரசு செய்யுங்கள். வேண்டாம் என்று சொன்னாலும் நீங்கள் செவிமடுக்கப்போவதில்லை. ஆனால், இப்படி திட்டங்களை மாற்றி அரசுக்கு நஷ்டம் ஏட்படுத்தாதீர்கள். அம்மா உணவகம், அம்மா கிளினிக். இப்ப பசுமை குடியிருப்பு திட்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X