ஊட்டி: நீலகிரியில் ஆண்டாண்டு காலம் வாழ்ந்து வரும் படுகரின மக்கள், 1941ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு படி, படுக சமுதாயம் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சுதந்திரத்திற்கு பின், 1951ம் ஆண்டு முதல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டனர். பழங்குடியினர் பட்டியலில் மீண்டும் சேர்க்க கோரி படுக சமுதாய மக்கள் 75 ஆண்டுக்கு மேலாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.