சேலம்: தாதகாப்பட்டி, மூணாங்கரட்டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், 25. இவர் மனைவியை, அதே பகுதியை சேர்ந்த சதீஷ், 34, தவறாக பேசியுள்ளார். இதுகுறித்து நேற்று காலை, தாமரைச்செல்வன் கேட்க, அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. சதீஷூக்கு ஆதரவாக அவரது நண்பரான, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், 29, சேர்ந்து, தாமரைச்செல்வனை தாக்கி கத்திரிகோலால் குத்தி உள்ளனர். இதில் காயம் அடைந்த அவரை, மக்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் புகார்படி, அன்னதானப்பட்டி போலீசார், சதீஷ், கார்த்திக்கை கைது செய்தனர்.