வாழப்பாடி: வாழப்பாடி அருகே உள்ள, 17 வயது சிறுமி, கோவையில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்தார். அப்போது, அதே நூற்பாலையில் பணிபுரிந்த, விருதுநகர், மம்சாபுரத்தை சேர்ந்த பாண்டியன், 26, என்பவருன் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த, 6ல் சிறுமி மாயமானதாக, அவரது பெற்றோர், கடந்த, 8ல் வாழப்பாடி போலீசில் புகார் அளித்தனர். இந்நிலையில் நேற்று வாழப்பாடி பஸ் ஸ்டாண்ட் அருகே, சிறுமியை மீட்ட போலீசார், சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருமண ஆசைகாட்டி சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு செய்ததாக, பாண்டியன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்த போலீசார், அவரை கைது செய்தனர்.