அரூர்: அரூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில், 852 விவசாயிகள், 1,800 குவிண்டால் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில், டி.சி.எச்., ரகம் குவிண்டால், 14 ஆயிரத்து, 69 முதல், 14 ஆயிரத்து, 489 ரூபாய் வரையும், ஆர்.சி.எச்., ரகம் குவிண்டால், 9,319 முதல், 10 ஆயிரத்து, 689 ரூபாய் வரையும் விற்பனையானது. மொத்தம், 1,800 குவிண்டால் பருத்தி, 1.30 கோடி ரூபாய்க்கு விற்பனையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.