விவசாயத்துக்கு இலவச மின்சாரம்: அதிகாரிகள் வசூல் வேட்டை புகார் | தர்மபுரி செய்திகள் | Dinamalar
விவசாயத்துக்கு இலவச மின்சாரம்: அதிகாரிகள் வசூல் வேட்டை புகார்
Added : ஜன 26, 2022 | |
Advertisement
 

பாப்பிரெட்டிப்பட்டி: கடத்தூர் மின்கோட்டத்திலுள்ள பொம்மிடி மின்வாரிய அலுவலகம் வடக்கு சரகத்தில், பொம்மிடி, கேத்துரெட்டிப்பட்டி உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் விவசாயிகள் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் கிணற்று சர்வீஸ், பூந்தோட்ட சர்வீஸ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். தற்போது, அனைத்து வகையான விவசாயிகளுக்கும், விவசாயம் செய்ய இலவச மின்சாரம் வழங்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து மின்வாரியத்துக்கு வரும் விவசாயிகளிடம், நேரடியாக சென்று இடத்தை பார்க்க, சர்வீஸ் வழங்க எஸ்டிமேட் போட, அதற்குண்டான வரைபடம் வரைய, போர்மேன் முதல் சி.ஐ., உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும் எனக்கூறி விவசாயிகளிடம், 20 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை அலுவலர்கள் வசூலிக்கின்றனர். கொடுக்காத விவசாயிகளுக்கு சர்வீஸ் கொடுக்க தாமதிக்கின்றனர். சில புரோக்கர்கள் மூலம், நேரடியாக பணம் வசூல் செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகமும், மின்வாரிய உயரதிகாரிகளும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து கடத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் ரவியிடம் கேட்டபோது, ''இலவச சர்வீஸ் வழங்க யாரும் பணம் கொடுக்க தேவையில்லை. அவ்வாறு அலுவலகத்தில் யாரேனும் வாங்கினால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X