தாசில்தாரை மாற்ற கோரி தி.மு.க., முற்றுகை | தர்மபுரி செய்திகள் | Dinamalar
தாசில்தாரை மாற்ற கோரி தி.மு.க., முற்றுகை
Added : ஜன 26, 2022 | |
Advertisement
 

காரிமங்கலம்: தாசில்தாரை மாற்றகோரி காரிமங்கலம் தாலுகா அலுவலகத்தை, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர்.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதியிலுள்ள அரசு அலுவலகங்களில் உள்ள ஊழியர்கள், அ.தி.மு.க.,வினருக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தி.மு.க.,வினர் கூறும் வேலைகளை செய்து கொடுக்க மறுப்பதாகவும் கூறி வருகின்றனர். காரிமங்கலம் தாசில்தார் சின்னா, அ.தி.மு.க., மற்றும் பா.ம.க.,வினர் கூறும் வேலைகளை மட்டும் செய்து கொடுப்பதாகவும், தி.மு.க.,வினரை மதிப்பதில்லை எனவும், அவரை மாற்றக்கோரி தாசில்தார் அலுவலகத்தை நேற்று, தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர். காரிமங்கலம் இன்ஸ்பெக்டர் வெங்கடராமன், தி.மு.க.,வினரை சமாதானம் செய்து அனுப்பினார்.

இது குறித்து, தாசில்தார் சின்னா கூறியதாவது: காரிமங்கலம் அடுத்த கும்பாரஹள்ளியை சேர்ந்த குப்பன், 1993ல் இறந்தவரின் இறப்பு சான்றிதழ் ஒன்றை எடுத்து வந்து, இறந்தவரின் தந்தை பெயர் மாறி உள்ளதை மாற்றி கொடுக்க கேட்டார். இதுபோன்று பெயர் மாற்ற முடியாது, நீதிமன்றத்தை நாட கூறினேன். அப்போது அவர், அலுவலக ஊழியரிடம், 'நான் ஆளுங்கட்சியை சேர்ந்தவன், நான் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும்' என ஒருமையில் பேசினார். இதை கேட்ட என்னையும் ஒருமையில் பேசியதால் அவரை வெளியே செல்ல கூறினேன். அவர், தி.மு.க.,வினரை அழைத்து வந்து, தேவையின்றி பிரச்னை செய்தார். அவர் கொடுத்த மனுவிற்கும், அவருக்கும் சம்பந்தமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X