கம்பைநல்லூர்: கம்பைநல்லூர் அடுத்த சொர்ணம்பட்டியில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. நேற்று அதிகாலை, 1:10 மணிக்கு கோவிலிலுள்ள உண்டியல் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் வந்தனர். அப்போது, கடப்பாரை மற்றும் ஹீரோ பேஷன் புரோ பைக்கை விட்டு விட்டு வாலிபர் ஒருவர் தப்பியோடினர். ஊர் பிரமுகர் மாதப்பன் புகார்படி, கம்பைநல்லூர் போலீசார் கே.ஈச்சம்பாடியை சேர்ந்த பிரவீன், 19, என்ற வாலிபரை தேடி வருகின்றனர். இவர், கடத்தூர் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாமாண்டு படிக்கிறார்.