ஊட்டி: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாய்கொல்லி வனப்பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண்யானை உயிரிழந்துள்ளது. பிற ஆண் யானையுடன் சண்டை போட்டதில் உயிரிழந்திருக்க கூடும் என்றும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே முழு தகவல் தெரிய வரும் எனவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.