தாலுகா அலுவலகம் முன் மக்கள் உள்ளிருப்பு போராட்டம் | கரூர் செய்திகள் | Dinamalar
தாலுகா அலுவலகம் முன் மக்கள் உள்ளிருப்பு போராட்டம்
Added : ஜன 26, 2022 | |
Advertisement
 

கிருஷ்ணராயபுரம்: கொம்பாடிப்பட்டியை சேர்ந்த மக்களுக்கு, இலவச வீட்டுமனை இடத்தை அளந்து முறைப்படி வழங்க கோரி, கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன், உள்ளிருப்பு போராட்டம் நேற்று நடத்தினர். கிருஷ்ணராயபுரம் அடுத்த, பிள்ளபாளையம் பஞ்., கொம்பாடிப்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கடந்த, 20 வருடங்களுக்கு முன், இலவச வீட்டுமனை நிலம் வழங்கப்பட்டது. அதற்கான பட்டா இதுவரை வழங்காமல் இருந்தது. இந்நிலையில், இந்த இடத்திற்கு தேவையான பட்டா வழங்கவும் அதற்கான முறையான நடவடிக்கை எடுக்க கோரி, நேற்று மாலை கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் முன், கொம்பாடிப்பட்டியை சேர்ந்த, 50க்கு மேற்பட்ட மக்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கிருஷ்ணராயபுரம் தாசில்தார் யாசோதா மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் ஒரு வாரத்திற்குள் சம்பந்தப்பட்ட இடத்தை அளந்து மக்களுக்கு முறைப்படி ஒப்படைக்கப்படும் என்றார். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X