கரூர்: குடியரசு தினத்தையொட்டி, கரூர் மாவட்டத்தில், 654 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுகுறித்து, கரூர் எஸ்.பி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குடியரசு தின விழாவையொட்டி, கரூர் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமலிருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட எல்லை பகுதிகளில், 17 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு, 654 போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு நிபுணர்கள் மூலமும், சோதனை செய்யப்படுகிறது. நகர்ப்பகுதி மற்றும் கிராமப்பகுதிகளில் ரோந்து வாகனங்களிலும், சாதாரண உடையிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.