கரூர்: கரூரில் தங்கம் தருவதாக மோசடி செய்த, மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் மாவட்டம், தெற்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்தவர் மதிவாணன், 63. இவரிடம் ஈரோட்டை சேர்ந்த அந்தோணி, மேரி மெட்டிபா, திருச்சியை சேர்ந்த ரவி ஆகியோர் கடந்த, 2020ல் அக்.,ல், தங்கம் தருவதாக கூறி, ஏழு லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர். ஆனால், அந்தோணி உள்ளிட்ட மூன்று பேரும் தங்கம் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுகுறித்து, மதிவாணன் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கரூர் டவுன் போலீசார் அந்தோணி உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.