குளித்தலை: நிலம் குத்தகையில் ஏற்பட்ட பிரச்னையில், 4 பேரை போலீசார் கைது செய்தனர். குளித்தலை அடுத்த, வெள்ளப்பட்டி பஞ்., கணக்கப்பிள்ளையூரை சேர்ந்தவர் துரைசாமி, 60. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தை, பொன்னம்பட்டியை சேர்ந்த வசந்தா என்பவருக்கு, 5 வருட குத்தகைக்கு விட்டார். அதில், பிரச்னை ஏற்படவே, இதுகுறித்த வழக்கு, குளித்தலை உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், கடந்த, 21ல் துரைசாமி தனது நிலத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அங்குவந்த வசந்தா, கணவர் ஆண்டியப்பன், மல்லிகா, முருகேசன் ஆகிய, 4 பேரும் பிரச்னை செய்தனர். இதுகுறித்து, துரைசாமி கொடுத்த புகார் படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, 4 பேரையும் கைது செய்தனர்.