சென்னையில் மீண்டும் தலைதூக்கும் பேனர் கலாச்சாரம் நடவடிக்கை எடுப்பதில் அதிகாரிகள் அசட்டை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

26 ஜன
2022
23:10
பதிவு செய்த நாள்
ஜன 26,2022 22:53

சென்னை மாநகரின் முக்கிய சாலைகளில் விளம்பர பேனர்கள் மீண்டும் தலைதுாக்க துவங்கியுள்ளன. பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை செயல்படுத்துவதில், அதிகாரிகள் மெத்தனப்போக்குடன் நடந்து கொள்வதால், துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையில், ராட்சத பேனர்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் உயிர் பலி அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர். போக்குவரத்து நிறைந்த முக்கிய சாலைகளின் ஓரங்களில், வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையிலான விளம்பர பேனர்களால், தொடர் விபத்துகள் ஏற்பட்டன; பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இதையடுத்து, சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில், சென்னை பள்ளிக்கரணை அருகே, துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், 2019 செப்டம்பர் 12ம் தேதி, கட்சி பிரமுகர் இல்ல நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில், இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ விபத்தில் சிக்கினார். பின்னால் வந்த லாரி, சுபஸ்ரீ மீது ஏறி இறங்கியதில், அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் எதிரொலியாக, சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அப்போது, மாநகநகரின் எந்த பகுதியிலும், விளம்பர பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தது. அதே போல், விளம்பர பேனர்களுக்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்துள்ளது.எனினும், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதில், அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் நடந்து கொள்வதும் தொடர் கதையாக உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பிரதான சாலைகளின் ஓரங்களின் தனியார் நிறுவனங்களின் சார்பில் ராட்சத பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக, நம் நாளிதழில் படங்களுடன் செய்தி வெளியானது. நம் நாளிதழ் செய்தியின் எதிரொலியாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து, அண்ணா சாலை உட்பட பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அகற்றப்பட்டன. புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம் பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் அகற்றப்பட்டன. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விளம்பர பேனர்களை அகற்ற, அந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிகாரிகளின் அதிரடி உத்தரவுப்படி பேனர்கள் அகற்றப்பட்டாலும், அவை வைக்க பயன்படும் இரும்பு ஸ்டாண்டுகள் அப்படியே விட்டு வைக்கப்படுவதால், சில நாட்கள் கழித்து அதே இடங்களில் மீண்டும் பேனர்கள் வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், நுாற்றுக்கணக்கான ராட்சத பேனர்கள் மீண்டும் முளைத்துள்ளன. இதனால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை நிலவுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், இளம்பெண்ணை பலி வாங்கிய அதே ரேடியல் சாலையில் பேனர்களின் எண்ணிக்கை, முன்பு இருந்ததை விட இரு மடங்கு அதிகரித்துள்ளது, பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதிகாரிகளின் கண்துடைப்பு நடவடிக்கையும், மெத்தனப் போக்குமே இதுபோன்ற அத்துமீறல்களுக்கு காரணம் என, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.தற்போது, ரேடியல் சாலையில் முளைத்துள்ள விதிமீறல்களை கண்டுகொள்ளாமல் விட்டால், இதே போல், மாநகரின் பிற பகுதிகளிலும் ராட்சத பேனர்கள் மீண்டும் தலை துாக்கும் அபாயம் இருப்பதாக, சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முற்றுப்புள்ளி வைப்பது எப்போது?இதுகுறித்து பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இருப்பதால், மற்ற பணிகளை கவனிக்க முடியவில்லை என்ற காரணத்தை கூறியே, விளம்பர பலகைகள் அதிகரிப்பதற்கு அதிகாரிகளே மறைமுக காரணமாக உள்ளனர்.சுபஸ்ரீ மரணத்தின் போது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின், கடுமையான கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அதில், அரசாங்கத்தின் அலட்சியம், அதிகாரிகளின் பொறுப்பின்மை, காவல்துறையினரின் கையாலாகாத்தனம் என கடுமையாக சாடினார்.தற்போது அதே ஸ்டாலின் முதல்வராக உள்ள நிலையில், தி.மு.க., ஆட்சியில் பேனர் கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியுள்ளது. புற்றீசலாக முளைத்துள்ள ராட்சத பேனர் கலாசாரத்தால், மீண்டும் உயிர் பலி நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பெரும் விபத்து ஏற்பட்டு, உயிர் பலி நிகழ்வதற்கு முன், சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதிகாரிகள் தவறும்பட்சத்தில், முதல்வரே நேரடி கவனம் செலுத்தி, இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். - -நமது நிருபர் --

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
27-ஜன-202208:59:24 IST Report Abuse
Lion Drsekar நடவடிக்கை எடுக்க வேண்டியவர்களுக்கு சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது, நீதிமன்றம் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலை, கேள்வி கேட்டவர்கள் அனைவரும் இன்று அமைதியாகி விட்டனர், கேள்வி கேட்கவேண்டியவர்கள் பயந்து ஒளிந்து கொண்டு விட்டனர், கேட்க நினைப்பவர்கள் தினமலர் வாயிலாக கருத்து தெரிவித்து தங்களின் ஆதங்கத்தை தீர்த்துக்கொள்கின்றனர், ஒரு இறப்பு ஏற்பட்டால் மட்டுமே மீண்டும் இந்த செய்தி செய்தியாக வரும் அதுவும் இருப்பவரின் பெயரைப்பொறுத்து, எதுவுமே சொல்வதற்கு இல்லை, அமைதிக்காப்பதே சாலச்சிறந்தது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X