சென்னை : குடியரசு தின விழாவையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.சென்னை, கோயம்பேடில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகத்தில் நடந்த 73வது குடியரசு தின விழாவில், மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பிரதீப் யாதவ் தேசிய கொடி ஏற்றிவைத்து, அணிவகுப்பு மரியாதை ஏற்றார்.இதையடுத்து, மெட்ரோ ஊழியர்களிடையே விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக, பூப்பந்து போட்டி, டேபிள் டென்னிஸ், நடை போட்டி உட்பட, பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற 54 பேருக்கு, நிர்வாக இயக்குனர் பரிசுகள் அறிவித்து பாராட்டினார்.விழாவில், மெட்ரோ ரயில் நிறுவன நிர்வாக இயக்குனர்கள் ராஜேஷ் சதுர்வேதி, டி.அர்ச்சுனன் மற்றும் உயர் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.