செங்கல்பட்டு : படாளம் காவல் நிலையத்தில் இருந்து, விசாரணை கைதி தப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது.காஞ்சிபுரம், பூக்கடை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வீரா, 45. திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக, இவரை படாளம் போலீசார் இரண்டு நாட்களுக்கு முன், காவல் நிலையம் அழைத்து வந்தனர். காவல் நிலைய சிறையில் அடைத்து விசாரித்தனர்.இதில், ஐந்து மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், காஞ்சிபுரத்தில் தங்க நகைகள் புதைத்து வைத்திருப்பதாக வீரா கூறியுள்ளார்.காவல் நிலையத்தில் ஐந்து போலீசார் பணியில் இருந்தனர். இந்நிலையில், காவல் நிலைய சிறை பூட்டப்படாமல் இருந்ததால், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, வீரா தப்பி ஓடிவிட்டார். தனிப்படை போலீசார், அவரை தேடி வருகின்றனர்.