சாலை அமைக்கும் பணி :அமைச்சர் வேலு நள்ளிரவில் ஆய்வு | சென்னை செய்திகள் | Dinamalar
சாலை அமைக்கும் பணி :அமைச்சர் வேலு நள்ளிரவில் ஆய்வு
Added : ஜன 26, 2022 | |
Advertisement
 

சென்னை : சென்னையில் முறையாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கிறதா என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நள்ளிரவில் ஆய்வு மேற்கொண்டார்.சென்னையில், 258 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. கடந்த 2021 நவ., மாதம் பெய்த வடகிழக்கு பருவமழையால், பல சாலைகள் சேதம் அடைந்தன. இவற்றில் தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளை புதுப்பிக்கும்போது, பழைய சாலைகளை தோண்டி அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கவேண்டும் என முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலர் இறையன்பு ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். பல இடங்களில், சாலையை தோண்டாமல், புதிய சாலை அமைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கிண்டி ஜி.எஸ்.டி., சாலை ரயில்வே மேம்பாலம் அருகில், சர்வீஸ் சாலையை புதுப்பிக்கும் பணிகள் 1.71 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடந்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் சாலையின் உயரம் அதிகரிக்காமல், பழைய சாலையை அகற்றி பணிகள் தரத்துடன் நடக்கிறதா என்பதை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, நேற்று முன்தினம் நள்ளிரவு 11.30 மணிக்கு திடீரென ஆய்வு செய்தார். சாலையை துளையிட்டு. திட்ட மதிப்பீட்டில் உள்ளபடி அடர்த்தி, உறுதி தன்மையுடன் பணிகள் நடக்கிறதா என்பதை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சந்திரசேகர், கோட்ட பொறியாளர் சரவணசெல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X