சென்னை, : சரக்கு போக்குவரத்து வாயிலாக தெற்கு ரயில்வே ஆயிரத்து 990 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.தெற்கு ரயில்வே சார்பில், சென்னை பெரம்பூரில் உள்ள, ரயில்வே ஸ்டேடியத்தில், 73வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர், பொறுப்பு பி.ஜி.மல்யா தேசியை கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். விழாவில், பி.ஜி.மல்யா பேசியதாவது:கடந்த, 2020 - -2021ல், கொரோனா தாக்கத்தால் நிறுத்தப்பட்ட ரயில் போக்குவரத்துக்களில், 93 சதவீத ரயில்கள் மீண்டும்இயக்கப்பட்டுவருகின்றன. ரயில்கள், 95.6 சதவீதம் நேரம் தவறாமல் இயக்கப்படுகின்றன. ஏப்., 2021 முதல், டிசம்பர் வரை, 2.17 கோடி டன் சரக்கு போக்குவரத்தால், ஆயிரத்து 990 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. தாம்பரம் - செங்கல்பட்டு மூன்றாவது புதிய பாதை; மதுரை - தேனி மீட்டர்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணி முடிந்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.