பரமக்குடியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜன
2022
23:21

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மாவட்ட நிர்வாகம், அரசு அலுவலகங்கள்,கட்சி அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளில் 73வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.ராமநாதபுரம் 'தினமலர்' கிளை அலுலகத்தில் குடியரசுதினவிழாவையொட்டி தேசியகொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில், காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் சங்கர்லால் குமாவத்தேசியக்கொடியினை ஏற்றிவைத்து, போலீசார் மரியாதையை ஏற்றுக்கொண்டார். மூவர்ணபலுான், சமாதான புறாவை பறக்கவிட்டார்.

காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய 59 போலீசாருக்கு தமிழக முதலமைச்சர் பதக்கங்களையும், 27 போலீசார், பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த159 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். முன்னாள் படை வீரர்கள் நலத்துறை, வருவாய்த்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, குடிசை மாற்றுவாரியம், மாவட்ட தொழில் மையம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, வேளாண் துறை, ஊரக வாழ்வாதார இயக்கம், மாற்றுத்திறனாளிகள்நலத்துறை, விளையாட்டுதுறை, தோட்டக்கலைத்துறை ஆகிய துறை மூலம் மொத்தம்130 பயனாளிகளுக்கு ரூ. 46 லட்சத்து 45 ஆயிரத்து 111 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர்கள் பாண்டிராஜ், ஐ.என்.ஏ., படையில் இருந்த மு.சேது ஆகியோர் வீடுகளுக்கு சென்று ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர்பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இவ்விழாவில் எஸ்.பி., கார்த்திக், டி.ஆர்.ஓ., காமாட்சி கணேசன், கூடுதல் கலெக்டர் பிரவீன்குமார், வன உயிரின காப்பாளர் ஜக்தீஸ் பகான் சுதாகர், அரசுத்துறை அதிகாரிகள்அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர். பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

ராமநாதபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கொடியேற்றினார். நீதிபதிகள் கவிதா, கதிரேசன், முல்லை, சிட்டிபாபு பங்கேற்றனர்.* ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் எஸ்.பி., கார்திக் கொடியேற்றினார்.சிறப்பாக பணிபுரிந்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டீன் அல்லி கொடியேற்றினார். டாக்டர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., சேக் மன்சூர் கொடியேற்றினார். அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. தனிதாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் நகராட்சி வளாகத்தில் கமிஷனர் சந்திரா தலைமையில் கொடியேற்றம் நடந்தது. ராமநாதபுரம் எம்.எல்.ஏ., காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், பொறியாளர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் சுங்கவரித்துறை அலுவலகத்தில் துணை ஆணையர் ஜெய்சிங் பிரவீன்குமார் கொடியேற்றினார். கண்காணிப்பாளர்கள் முத்துலட்சுமி, ரவி, ஆய்வாளர்கள் பங்கேற்றனர். * ராமநாதபுரம் வனத்துறை அலுவலகத்தில் கொடியேற்றம்நடந்தது, வன உயிரின காப்பாளர் ஜக்தீஸ் பகான் சுதாகர், ரேஞ்சர் ஜெபஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

ராமநாதபுரத்திலுள்ள மாநில வரி அலுவலகத்தில் வரி அலுவலர் பாலகுமார் கொடியேற்றினார். அலுவலர்கள் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் நகராட்சி அறிஞர் அண்ணாதுரை நடுநிலைப்பள்ளியில் நகராட்சி கமிஷனர் சந்திரா கொடியேற்றினார். வட்டாரக்கல்வி அலுவலர் ராமநாதன், தலைமையாசிரியர் ஜெயந்தி, ஆசிரியர்கள் குணசேகரன், மாதவி பங்கேற்றனர்.

ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் நிலைய அதிகாரி ரபேல் சுரேன் கொடியேற்றினார். ரயில்வே பாதுகாப்புபடை எஸ்.ஐ.,க்கள் மோகன்ராஜ், முத்துராஜ், முதல்நிலை காவலர் ஜலாலுதீன், சுகாதாரஆய்வாளர் கரம்சங்கர், குழந்தைகள் மைய உதவி இயக்குனர் தேவராஜ், துணை மைய ஒருங்கிணைப்பாளர்முகமது, சிலம்பொலி சிலம்பம் பள்ளி லோகசுப்பிரமணின் பங்கேற்றனர். கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

ராமநாதபுரம் அஞ்சலக கோட்டக்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்காணிப்பாளர் சித்ரா கொடியேற்றினார். அலுவலர்கள், தபால்காரர்கள் பங்கேற்றனர்.* ராமநாதபுரம் புறநகர் கிளையில், ஐ.என்.டி.யூ.சி., போக்குவரத்து தொழிற்சங்கம்சார்பில், முன்னாள் தலைவர்சேகர் கொடியேற்றினார். மண்டல தலைவர் பிச்சை, நிர்வாகிகள் சுப்ரமணியன், பாலமுருகன் பங்கேற்றனர்.* மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நகரத் தலைவர் வீரபாகு தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் நாகேந்திரன் கொடியேற்றினார்.மீனவர் அணி மாநில செயலாளர் நம்புராஜன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் குமரன், சிறுபான்மையர் அணி மாவட்ட தலைவர் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றனர்.* செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியில்நடந்த விழாவில் கல்லுாரிதாளாளர் சின்னதுரை அப்துல்லா கொடியைஏற்றினார். உடல்கல்வி இயக்குனர் ஜெகநாதன், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* செய்யது அம்மாள் கலைமற்றும் அறிவியல் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, முதல்வர் அமானுல்லா ஹமீது முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்ட செஸ் அசோசியேஷன் தலைவர் சுந்தரம் கொடியேற்றினார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* வேலுமனோகரன் கலை-அறிவியல் மகளிர் கல்லுாரியில் தாளாளர் வேலுமனோகரன் கொடியேற்றினார். துணைத்தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா, முதல்வர் காஞ்சனா, பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

காந்திஜி தேங்காய் உரியல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில், எம்.ஜி.ஆர்., வேடமணிந்த அக்கரை மூஞ்சியை சேர்ந்த பாண்டி உனக்காய் கொடியேற்றினார். தலைவர் நாகலிங்கம், உதவி தலைவர் சுந்தரசாமி, செயலாளர் நாகராஜ், பொருளாளர் முனியாண்டி பங்கேற்றனர்.ராமேஸ்வரம்ராமேஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மார்ட்டின்ராஜன், ராமேஸ்வரம்நகராட்சி அலுவலகத்தில் பசுமை பணியாளர் மனோகரன், ராமநாதசுவாமி கோயில் அலுவலகத்தில் மேலாளர் சீனிவாசன், தங்கச்சிமடம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவி குயின்மேரி, பாம்பன் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவி அகிலாபேட்ரிக், ராமேஸ்வரம் அரசு மேல்நிலைபள்ளியில் ஆசிரியர் தாயுமானவன், தனுஷ்கோடி அரசு நடுநிலைபள்ளியில் தலைமையாசிரியை ஜேம்ஸ் ஜெயசெல்வி, நம்பர் 1 அரசு நடுநிலைபள்ளியில் கிராம கல்விக்குழு தலைவர் பாலமுருகன், பாம்பன் தரவைதோப்பில் இல்லம் தேடி கல்வி மையத்தில் பொறுப்பாளர் ஜேம்ஸ், ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள காந்தி சிலை முன்பு காங்., மாநில செயற்குழு உறுப்பினர் கே. பாரிராஜன் ஆகியோர் தேசிய கொடிகளை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.பரமக்குடி* பரமக்குடி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., முருகன் தேசியக் கொடி ஏற்றினார். நேர்முக உதவியாளர் ராஜகுரு, தலைமை உதவியாளர் அமர்நாத் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.* தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தம்பிராஜா தேசியக் கொடியை ஏற்றினார். துணை தாசில்தார் சடையாண்டி, அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

சவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் கல்விக்குழு தலைவர் நாகநாதன் தலைமையில் தாளாளர் அமரநாதன் கொடியேற்றினார். தலைமையாசிரியர் நாகராஜன் வரவேற்றார். * சவுராஷ்ட்ரா இளநிலை பள்ளியில் தாளாளர் ராஜன் தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தன் கொடி ஏற்றினார்.* சவுராஷ்டிரா நர்சரி பள்ளியில் துணை தலைவர் நாகநாதன் தலைமையில், தாளாளர் வரதராஜன் கொடியேற்றினார்.* இந்திராநகர் சவுராஷ்டிரா தொடக்கப்பள்ளியில் தலைவர் நாகநாதன் கொடி ஏற்றினார். கல்விக் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* கீழ முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் தாளாளர் சாதிக்பாட்சா தலைமை வகித்தார்.ஜமாத் சபைத் தலைவர் ரபி அகமது, செயலாளர் ஜமாலுதீன், பொருளாளர் முகமது உமர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் அஜ்மல்கான் வரவேற்றார். முன்னாள் தலைவர் முகம்மது ஈஷா கொடியேற்றினார்.* லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி தலைவர் கண்ணப்பன் தலைமை வகித்தார். டாக்டர்வரதராஜன், ஜெகநாதன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க தலைவர் முகமது உமர் கொடியேற்றினார்.* சோமநாதபுரம் சவுராஷ்டிரா தேசிய நடுநிலைப்பள்ளியில் கல்வி கழக தலைவர் ராமய்யன் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர்கழக தலைவர் குப்புசாமி முன்னிலை வகித்தார். கல்விக் கழகத் தாளாளர் சங்கர் வரவேற்றார்.

சோமநாதபுரம் சவுராஷ்டிரா சபை தலைவர் கணேசன் கொடியேற்றினார். தலைமை ஆசிரியை ஸ்ரீதேவி நன்றி கூறினார்.* காளிதாஸ் நடுநிலைப்பள்ளியில், சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மேனேஜிங் டிரஸ்டி நாகநாதன்தலைமை வகித்து, கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் ரவி வரவேற்றார். அனைத்து ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.* எமனேஸ்வரம் நேருஜி மைதானத்தில் காங்., மாவட்ட துணைத்தலைவர் சேஷய்யன்தலைமையில் குடியரசு நிகழ்ச்சி நடந்தது நெசவாளர் அணி மாநில செயலாளர் கோதண்டராமன் மாவட்ட செயலாளர்கள்மாதவன், சந்திரன், ரபீக் அகமது உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.* சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் வாரிசுகள் சங்கம் சார்பில் காந்தி சிலை முன்பு குடியரசு தின விழா, நேதாஜி 125-வது பிறந்தநாள் விழா நடந்தது. பொதுச்செயலாளர் ஹாரிஸ் தலைமை வகித்தார். சங்க தலைவர் ஜெயவீரபாண்டியன், கவுரவஆலோசகர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். நகர காங்., தலைவர் அகமது கபீர் கொடியேற்றினார்.

அகில பாரத வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பின் சார்பில் குடியரசு தின விழா, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125வது ஜெயந்தி விழா நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் கண்ணன் தலைமை வகித்தார். ஆர்.எஸ்.எஸ்., மாநில நிர்வாகி நாகராஜன் பேசினார். நகர் நிர்வாகி சுந்தரேஸ்வரன் என்று கூறினார்.* பாரதியார் நடுநிலைப்பள்ளியில் செயலாளர் குணசேகரன் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றினார். ஆசிரியர்கள் பங்கேற்றனர்.*முத்தாலம்மன் பாலிடெக்னிக்கில் கல்லூரியில் சேர்மன் முருகானந்தம் தேசியக் கொடியை ஏற்றினார். முத்தாலம்மன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரியில் செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி கொடியேற்றினார்.திருவாடானைதிருவாடானை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்வேல்முருகன் கொடியேற்றினார். கோலப்போட்டியில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் முகமதுமுக்தார் கொடியேற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாண்டி, சேவுகப்பெருமாள், மேலாளர்கள் ரவி, பழனிநாதன் கலந்து கொண்டனர்.டி.எஸ்.பி. அலுவலகத்தில் டி.எஸ்.பி. ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் நிலைய அலுவலர் வீரபாண்டி கொடியேற்றினார். ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் இலக்கியாராமு கொடியேற்றினார்.

துணை தலைவர்மகாலிங்கம், ஊராட்சி செயலர்சித்ரா கலந்து கொண்டனர். கோடனுார் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் காந்தி கொடியேற்றினார்.* தொண்டி பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் செல்வராஜ் கொடியேற்றினார். தொண்டி அரசு தொடக்கபள்ளியில் (மேற்கு) தலைமை ஆசிரியர் சாந்தி கொடியேற்றினார். அரசு தொடக்கப்பள்ளி (கிழக்கு) தலைமை ஆசிரியர் லியோஜெரால்டுஎமர்சன் கொடியேற்றினார். த.மு.மு.க., அலுவலகத்தில் மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் ஜிப்ரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கடலாடி* யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் முத்துலட்சுமி தேசியக்கொடியேற்றினார். துணைத்தலைவர் ஆத்தி முன்னிலை வகித்தார். ஒன்றியகவுன்சிலர் முனியசாமி பாண்டியன் வரவேற்றார்.கடலாடி யூனியன் கமிஷனர்உம்முல்ஜாமியா, பி.டி.ஓ., நடராஜன் உட்பட உள்ளாட்சித்துறைதுறை அலுவலர்கள் பங்கேற்றனர்.* தாசில்தார் அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மரகதமேரி தேசியக்கொடி ஏற்றினார்.

ஊராட்சி அலுவலகத்தில்தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம் தேசிய கொடியேற்றினர். ஊராட்சி செயலாளர் முனீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.* அரசு கலை அறிவியல்கல்லூரியில் முதல்வர் பாண்டிமாதேவி தேசியக்கொடி ஏற்றினார். பேராசிரியர்கள் பங்கேற்றனர்.* பெருநாழி அருகே உச்சிநத்தம் ஆறுமுக விலாஸ் இந்து ஆரம்பப் பள்ளியில் ஊராட்சிதலைவர் பாமா கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார்.* பெருநாழி ஊராட்சி தலைவர் பாப்பா ஆத்திமுத்து தேசியக்கொடி ஏற்றினார். ஊராட்சி செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.* சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சேகர் தேசியக் கொடி ஏற்றினார். கணக்காளர் முத்துராமலிங்கம் உட்பட பேரூராட்சிஅலுவலர்கள், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* சாயல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதாரமணி தேசிய கொடி ஏற்றினார்.* சாயல்குடி அரசு பெண்கள்மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சாந்தி தேசிய கொடி ஏற்றினார்.* த.மு.மு.க., மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நகர் தலைவர் ஜாபர் அலி தேசிய கொடியேற்றினார். மாவட்ட செயலாளர் முகம்மதுமுகிதுல்லா தலைமை வகித்தார். மாநில தலைமை பிரதிநிதி சம்சுதீன் சேட் முன்னிலை வகித்தார்.

ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.கமுதிஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் மாதவன், பேரூராட்சி அலுவலகத்தில் செயல்அலுவலர் இளவரசி, அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் விஜயா, டி.எஸ்.பி.முகாம் அலுவலகத் தில் டி.எஸ்.பி., மணிகண்டன்,போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் அன்புபிரகாஷ், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கலைவாணி, பாப்பனம்ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அமுதா, மருதங்கநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் காவடி முருகன், கோட்டைமேடு பசும்பொன் திரு முத்துராமலிங்கத்தேவர் நினைவு கல்லூரியில் முதல்வர் அருணாசலம், தளவநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர்புளியம்மாள், கீழராமநதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் பழனி, குண்டுகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் சுதாகர், நகரத்தார்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துவிஜயன், பசும்பொன் ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றினர்.முதுகுளத்துார்முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் தர்மர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

பி.டி.ஓ.க்கள் ராஜேந்திரன், அன்பு கண்ணன் முன்னிலை வகித்தனர்.தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தில்குமார், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மாலதி, டி.எஸ் பி. முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி. சின்னகண்ணு, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் மோகன், கீழத்தூவல் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் லெட்சுமி, இளஞ்செம்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி கொடியேற்றினர்.காந்தி சிலை அருகே காங்., சார்பில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் வேலுசாமி, தேசிய கொடி ஏற்றி வைத்தார்.வட்டார தலைவர்கள் புவனேஸ்வரன், ராமர், சுரேஷ்காந்தி முன்னிலை வகித்தனர்.அரசு மருத்துவமனையில்டாக்டர் மனோஜ்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைமை செவிலியர் சண்முகவள்ளி முன்னிலை வகித்தார்.கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார டாக்டர் நெப்போலியன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.துணைமின் நிலையத்தில்​ உதவி பொறியாளர் சுஷில்குமார், அரப்போது ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சரஸ்வதி, பொன்னக்கனேரி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சத்தியபிரியா, தேரிருவேலி ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் அபுபக்கர் சித்திக், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைபள்ளியில் தலைமை ஆசிரியை சந்தனவேல், மு.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜோசப் விக்டோரியா ராணி கொடியேற்றினர்.

பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஜமாத் தலைவர் முகமது இக்பால் தலைமை வகித்தார். தாளாளர் ஷாஜகான் தேசிய கொடி ஏற்றி வைத்தார். கல்விக்குழு தலைவர் காதர் முகைதீன், தாளாளர்கள் சீனிமுகமது, செய்யது அபுதாஹிர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியர் முகம்மது சுல்தான் அலாவுதீன் வரவேற்றார்.காமராஜர் மெட்ரிகுலேஷன்பள்ளியில் தாளாளர் அய்யாசாமி, கண்ணா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் நிறுவனர் காந்திராசு, செல்வநாயகபுரம் மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் பால்சாமி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ஜோசப்ராஜ், கே.ஆர்.பட்டணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் மார்க்ரெட் மேரி தலைமையில் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தேசிய கொடி ஏற்றினர்.வெங்கலக்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி​யில் ஊராட்சி தலைவர் செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார். தலைமையாசிரியர்கள் ஜெயபால், ஆலிஸ் முன்னிலை வகித்தனர்.கீழப்பனையடியேந்தல் தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் ரோஸ்லின் ஜெசிந்தா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.அலங்கானுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் வினோத்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

தலைமையாசிரியர் நுக்மான் ஹக்கீம், உதவி தலைமையாசிரியர் முகம்மது இப்ராஹிம் முன்னிலை வகித்தனர்.ஆத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் ஆனந்தநாயகி, ஆனைசேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்ஊராட்சி தலைவர் முருகவேல், மருதகம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் ஊராட்சி துணைத்தலைவர் குமரகுரு தேசிய கொடி ஏற்றி வைத்தனர்.காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்ஊராட்சி தலைவர் இந்திராகாந்தி, இளஞ்செம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஊராட்சி தலைவர் பொற்கொடி, ஏனாதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் பாரதி, அ.நெடுங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் அழகம்மாள், முதுகுளத்தூர் மாற்றுத்திறனாளி பயிற்சி பள்ளியில் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகள் சங்கம் சார்பில் செயல் அலுவலர் மாலதி, முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்கம் அலுவலகத்தில் தலைவர் கண்ணன், செயலாளர் வேலு தலைமையில் கேப்டன் செந்தூர்பாண்டி தேசிய கொடி ஏற்றினர்.சாம்பக்குளம் அருகே கவினா இண்டர்நேஷ்னல் பள்ளியில் தலைவர் கண்ணதாசன் பாண்டியன் தலைமையில் தாளாளர் ஹேமலதா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.பசும்குடில் ஆதரவற்ற முதியோர், குழந்தைகள் காப்பகத்தில் செயலாளர் சின்னமருது, முதுகுளத்தூர் தர்மமுனீஸ்வரர் சிலம்பம் பயிற்சி பள்ளியில் பயிற்சியாளர் ஜீவா, சோனைமீனாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல்வர் கோவிந்தராஜன் தலைமையில் தாளாளர் ரெங்கநாதன் தேசிய கொடி ஏற்றினர்.நல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் தங்கபாண்டியன், குமாரக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் செந்தில், பொசுக்குடி ஊராட்சி ஒன்றியதொடக்கப்பள்ளியில் ஊராட்சி துணைத்தலைவர் முருகன், தமுமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் காதர் முகைதீன் தேசிய கொடி ஏற்றினர்.

மாவட்ட தலைவர் முகமது இக்பால்,பொருளாளர் வாவா ராவுத்தர் முன்னிலை வகித்தனர்.ஆர்.எஸ்.மங்கலம்* 73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு, ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில், யூனியன் தலைவர் ராதிகா பிரபு தேசியக்கொடி ஏற்றினார். துணைத் தலைவர் சேகர், பி.டி.ஓ.,க்கள் முத்துகிருஷ்ணன், மல்லிகா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், ஒன்றிய கவுன்சிலர்கள் வெங்கடாஜலபதி, யோகேஸ்வரன், பிரபு, ராஜீவ் காந்தி, பத்மினி கருப்பையா, கமலக்கண்ணி உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். மேலாளர் கோட்டைராஜ் நன்றி தெரிவித்தார்.* பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் மெய்மொழியன் தேசிய கொடியேற்றினார். தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகவேல், போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தேவி, தேசியக் கொடியை ஏற்றினார்.* திருப்பாலைக்குடி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டர் பாலசிங்கம், ஆர்.எஸ்.மங்கலம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில், நிலைய அலுவலர் கமலநாதன், சனவேலி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் பகவதிகுமார் தேசிய கொடியேற்றினார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.* பாரனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி தலைவர் மணிமேகலை, ஆனந்தூர் அருகே ஆனைக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி சுமன் கொடி ஏற்றினர். தலைமையாசிரியர் சுரேஷ், உதவி ஆசிரியர் பாக்கியராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* திருத்தேர்வலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், தலைமை ஆசிரியர் இருதயசாமி, இருதயபுரம் திரு இருதயஉயர்நிலைப் பள்ளியில், தாளாளர் செபமாலை சுரேஷ் தேசியக் கொடி ஏற்றினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெகோ, தலைமையாசிரியர் வல்லவதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.* இருதயபுரம் ஆர்.சி., தொடக்கப்பள்ளியில், தலைமையாசிரியர் ஜான் பீட்டர், குலமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,ஓடைக்கால் ஊராட்சி மன்ற தலைவர் முத்து தேசிய கொடியேற்றினார். தலைமையாசிரியர் செபஸ்தியான் தர்மராஜ் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.* மாடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,மேல்பனையூர் ஊராட்சி மன்ற தலைவர் கோபி தேசியக்கொடி ஏற்றினார். தலைமையாசிரியர் ஜாஸ்மின் ஷோபனா உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அனைத்து வியாபாரிகள் நல சங்கம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில், ஜமாத் தலைவர் ஹாஜா கொடியேற்றினார். வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அயூப்கான், செயலாளர் வேல்முருகன், பொருளாளர் அன்சூர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.திருப்புல்லாணி* திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் ஒன்றியக்குழு தலைவர் புல்லாணி தேசியக்கொடி ஏற்றினார். துணைத்தலைவர் சிவலிங்கம், பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், மேகலா மேனேஜர் மலைராஜ், கணக்காளர் சரவணன் உட்பட அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.* ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் கஜேந்திர மாலா தேசியக்கொடி ஏற்றினார். ஊராட்சி செயலாளர் வாணி உட்பட பலர் பங்கேற்றனர்.* ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் வன்னிமுத்து தேசிய கொடி ஏற்றினார். ஆசிரியர்கள் சாந்தி, அரசி, சலீனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.* ரெகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் தேசியக்கொடியேற்றினார். துணைத்தலைவர் ஜெகத்ரட்சகன் உட்பட வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.* கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் முருகேசன் தேசியக்கொடி ஏற்றினார். வட்ட வழங்கல் அலுவலர் பழனிக்குமார் உட்பட வருவாய் துறை பணியாளர்கள் பங்கேற்றனர்.* நகராட்சி அலுவலகத்தில்கமிஷனர் செல்வராஜ் தேசியக்கொடி ஏற்றினார். சுகாதார ஆய்வாளர் பூபதி, கணக்காளர் தமிழ்ச்செல்வன்உட்பட நகராட்சி பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்றனர்.* கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதல்வர் சுமையா தேசியக்கொடியேற்றினார்.சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக்தாவூத்கான் உட்பட கல்லூரிபேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.

முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் முதல்வர் அலாவுதீன் தேசியக்கொடியேற்றினார். பேராசிரியர்கள், கல்லூரி அலுவலர்கள் பங்கேற்றனர்.* மஹ்துாமியா மேல்நிலைப்பள்ளியில் பழைய குத்பா பள்ளி ஜமாஅத் தலைவர் செய்யது அபுதாகிர் தேசியக்கொடி ஏற்றி வைத்தார். தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி வரவேற்றார். ராமமூர்த்தி நன்றி கூறினார். ஜமாத் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.* முஹம்மது சதக் இன்ஜினியரிங் கல்லூரியில் முதல்வர் முகம்மது ஷெரீப் தேசியக் கொடியேற்றினார். துணை முதல்வர் அழகிய மீனாள் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.* செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதல்வர் ரஜபுதீன் தேசியக்கொடியேற்றினார். கல்லுாரி அலுவலர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X